Skip to main content

Posts

Showing posts from October, 2019

வேண்டாத எண்ணங்கள்

வேண்டாத எண்ணங்கள். மரத்திற்கு மரம் தாவிக் கொண்டிருந்த குரங்கு கொடியைப் பிடிப்பதற்குப் பதில் தொங்கிக் கொண்டிருந்த பாம்பை பிடித்தது. பிடித்தவுடன் தான் அது கொடியல்ல பாம்பு என அறிந்து குழம்பியது. பாம்பைக் கையிலிருந்து விடுவித்தால் அது தன்னைக் கடித்துவிடுமோ என்ற பயத்தினால் பாம்பைப் பிடித்த பிடியைத் தளர்த்தாமல் அங்கும் இங்குமாக குதித்துக் களைப்படைந்தது. பசியினால் மிகவும் சேர்வடைந்தது. மற்ற குரங்கள் கையில் பாம்பு இருப்பதால் உதவிக்கு வரமுடியாமல் ஒதிங்கின. குரங்கின் பிடியில் நீண்ட நேரம் பாம்பை வைத்திருந்ததால் அது இறந்தது. அது இறந்தது தெரியாமல் பிடியையும் விடாமல் இருந்து பசி தாகத்தால் குரங்கும் உயிர் துறந்தது. இந்த நிகழ்வு என்ன சொல்கின்றது என்றால் வேண்டாத எண்ணங்களை வளர்த்துக் கொண்டு அவற்றை விட்டுவிடத் தெரியாமல் துன்பத்தில் சுழன்று கொண்டிருக்கும் மனத்திற்கு உயிர் உடலை விட்டு நீங்கும் காலம் வரை என்றும் துயரம்தான்...!!